தாராவி புதிய பி.கே.சி.யாக உருவெடுக்கும் முதல்-மந்திரி பட்னாவிஸ் நம்பிக்கை


தாராவி புதிய பி.கே.சி.யாக உருவெடுக்கும் முதல்-மந்திரி பட்னாவிஸ் நம்பிக்கை
x
தினத்தந்தி 8 July 2019 4:30 AM IST (Updated: 8 July 2019 5:39 AM IST)
t-max-icont-min-icon

தாராவி புதிய பி.கே.சி.யாக உருவெடுக்கும் என முதல்-மந்திரி தேவேந்திரபட்னாவிஸ் நம்பிக்கைதெரிவித்து உள்ளார்.

மும்பை,

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் பாந்திராவில் உள்ள ஓட்டல் ஒன்றில் பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

வர இருக்கும் தேர்தல்களில் மும்பை மற்றும் மாநிலத்தில் 50 சதவீத வாக்காளர்கள் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்.

கடைசியாக நடந்த உறுப்பினர் சேர்க்கையின் போது பா.ஜனதாவுக்கு 1 கோடி உறுப்பினர்கள் இருந்தனர். இந்த எண்ணிக்கை 2½ கோடியாக அதிகரிக்கப்பட வேண்டும். மும்பையில் மட்டும் 30 லட்சம் வாக்காளர்கள் பா.ஜனதா உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.

மும்பை பெருநகர பகுதிகளில் 10 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளன. குடிசைவாசிகள் அனைவருக்கும் வீடு கட்டி கொடுக்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் தாராவி புதிய பி.கே.சி.யாக (பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ்) உருவெடுக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story