போலி பீடிகள் கடத்திய வாலிபர்கள் கைது


போலி பீடிகள் கடத்திய வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 8 July 2019 5:45 AM IST (Updated: 8 July 2019 5:45 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலத்தில் போலி பீடிகள் கடத்திய வாலிபர் கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருமங்கலம்,

திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் நேற்று போலீஸ் துணை சூப்பிரண்டு அருண், இன்ஸ்பெக்டர் சிவ சக்தி, சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் உள்பட போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்ய முயன்ற போது நிற்காமல் வேகமாக சென்றது.

போலீசார் வேனை மடக்கி பிடித்து சோதனை செய்த போது காய்கறிகளுக்கு கீழே பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி பீடிகள் இருந் தது கண்டுபிக்கப்பட்டது.இதையடுத்து 19 பீடி பண்டல்களை போலீசார் கைப்பற்றினர்.

போலீசார் விசாரணையில் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள குருவன் கோட்டையை சேர்ந்த கார்த்தி (வயது21), ராஜா (31) ஆகிய 2 பேரும் தஞ்சாவூருக்கு போலி பீடி பண்டல்களை கடத்தியதாக தெரிவித்தனர்.இதையடுத்து 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Next Story