ஈரோடு வெட்டுக்காட்டுவலசில் செயல்படும் 36 சாய -சலவை பட்டறைகளை மூடக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்; நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதாக புகார்
ஈரோடு வெட்டுக்காட்டுவலசில் செயல்படும் 36 சாய -சலவை பட்டறைகளால் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதால் அவைகளை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
ஈரோடு வெட்டுக்காட்டுவலசு மடிகாரர் காலனி பகுதியில் 1,000-த்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த குடியிருப்பு பகுதியில் ஏராளமான சாய மற்றும் சலவை பட்டறைகள் இயங்கி வருகின்றன.
இந்த பட்டறைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீர் வெளியேற்றப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் மாசு அடைந்து விட்டதாக கூறி அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களது ஆழ்குழாய் கிணற்றில் எடுக்கப்பட்ட மாசு அடைந்த தண்ணீரை வாளிகளில் வைத்திருந்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறும்போது, ‘எங்கள் பகுதியில் 36 சாய -சலவை பட்டறைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டறைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் இரவு மற்றும் பகல் நேரங்களில் சாக்கடை கால்வாயில் திறந்து விடப்படுகின்றன.
இப்படி விடும்போது சாக்கடை கால்வாய் நிரம்பி நிலத்தடியில் சாயக்கழிவுநீர் இறங்குகிறது. இதனால் எங்கள் பகுதியில் உள்ள அனைத்து ஆழ்குழாய் கிணறுகளிலும் தற்போது சாயம் கலந்த தண்ணீர் தான் வருகிறது.
இதன் காரணமாக புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது. இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் சாய -சலவை பட்டறைகளை உடனடியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
அதற்கு போலீசார், ‘இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நீங்கள் உங்களுடைய போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story