ஒளிபரப்பு நிறுவனத்தில் வேலை
இந்திய தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான, பிரசார் பாரதி நிறுவனம், தற்போது தூர்தர்சன் செய்திச் சானலுக்கு குறிப்பிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
‘ஆங்கர் கம் கரஸ்பாண்டன்ட்’, காப்பிரைட்டர், அசைன்மென்ட் கோஆர்டினேட்டர், கெஸ்ட் கோஆர்டினேட்டர், கேமரா பெர்சன், பிராட்காஸ்ட் எக்சிகியூட்டிவ் போன்ற பணியிடங் களுக்கு மொத்தம் 89 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ரேடியோ/ டி.வி. புரொடக்சன் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு படித்தவர்கள் புராட்காஸ்ட் எக்சிகியூட்டிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சினிமட்டோகிராபி, வீடியோகிராபி, பப்ளிக் ரிலேசன், ஜர்னலிசம் பட்டப்படிப்புகள், மாஸ் கம்யூனிகேசன் முதுநிலை டிப்ளேமா படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம்.
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணி உள்ளது.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். Deputy Director (Hr), oom No.413, 4th Floor. DD News, Doordharshan Bhawan, Tower-b, Copernicus Marg. New Delhi 110001 என்ற முகவரிக்கு ஜூலை 12-ந் தேதிக்குள் விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டும். இது பற்றிய விவரங்களை www.prasarbharati.gov.in,www.ddnews.gov.in ஆகிய இணையதள பக்கங்களில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story