விழுப்புரத்தில், தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


விழுப்புரத்தில், தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 July 2019 4:30 AM IST (Updated: 8 July 2019 11:18 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம், 

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நேற்று மாலை தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் துளசிராமன், பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாநில தலைவர் திருநாவு.குமரேசன் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.

ரே‌‌ஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி புதிய ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம், சங்க பணியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும் அரசாணை வழங்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் செந்தில்முருகன், ஸ்ரீராமலு, இணை செயலாளர்கள் அனந்தசயனன், கோவிந்தராஜ், நிர்வாகிகள் வேலு, தெய்வீகன், பழனி, ஏழுமலை, குமார், மூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் சுகுமார் நன்றி கூறினார்.

Next Story