பல்லடம் அருகே கார் மோதி பால் வியாபாரி பலி


பல்லடம் அருகே கார் மோதி பால் வியாபாரி பலி
x
தினத்தந்தி 9 July 2019 4:15 AM IST (Updated: 9 July 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே கார் மோதி பால் வியாபாரி பலியானார்.

பல்லடம்,

பல்லடம் அருகே ராயர்பாளையம் முத்துக்கவுண்டர் வீதியை சேர்ந்தவர் மணியன். இவருடைய மகன் பிரசாந்த்(வயது 23). இவர் பால் வியாபாரமும், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் சூப்பர்வைசராகவும் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பிரசாந்த் மோட்டார் சைக்கிளில் ஆலுத்துப்பாளையத்தில் உள்ள தனது சித்தி வீட்டுக்கு நேற்று மதியம் சென்று கொண்டு இருந்தார்.

பல்லடம்-தாராபுரம் ரோட்டில் அலுத்துப்பாளையம் பிரிவு அருகே சென்ற போது பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரசாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த நிலையில் கள்ளிபாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(63) என்பவர் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தார். விபத்து ஏற்படுத்திய காருக்கு பின்னாலேயே அவர் வந்தார். திடீரென்று அந்த கார், பிரசாந்த் வந்த மோட்டார் சைக்கிளில் மோதியதால் அதை ஓட்டி வந்தவர் காரை நிறுத்தினார்.

இந்த நிலையில் காருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த பாலசுப்பிரமணியன், எதிர்பாராமல் கார் மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story