ஊருணிகளை தூர்வாரிய கிராமப்புற இளைஞர்கள்; மரக்கன்றுகள் நடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்
காரைக்குடி அருகே உள்ள ஊருணிகளை கண்டுப்பிடித்து அதை தூர்வாரும் பணியில் கிராமப்புற இளைஞர்கள் ஈடுபட்டனர். மேலும் கிராமப்புறத்தை சுற்றிலும் மரக்கன்றுகளை நடுவதற்கான ஆயத்த பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்லல்,
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முறையாக பராமரிப்பு செய்ய வேண்டிய நீர்நிலைகளை மராமத்து செய்யாததால் மழைக்காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல், மழைநீர் வீணாக்கப்பட்டு வந்தது. அதற்கு பலனாகத்தான் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக குடிதண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு தற்போது தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை மராமத்து செய்ய தீவிரம் காட்டி வருகிறது.
இது ஒருபுறம் இருக்க அரசின் உதவியை எதிர்பாராமல் காரைக்குடி அருகே கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலங்குடி கிராமத்தில் உள்ள இளைஞர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அந்த கிராமப்புறத்தில் உள்ள தூர்ந்து போன ஊருணிகளை கண்டுப் பிடித்து அவற்றை தற்போது தூர்வாரி தண்ணீர் தேக்கி வைக்கும் வகையில் தயார் படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து இந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கூறியதாவது:- எங்கள் கிராமத்தை சுற்றி ஏராளமான ஊருணிகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மழைக்காலத்தில் இந்த ஊருணிகளில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு அவற்றை பொதுமக்கள் குளியல் மற்றும் தங்களின் இதர தேவைக்காக பயன்படுத்தி வந்தனர். இதையடுத்து காலப்போக்கில் இந்த ஊருணிகள் அனைத்தும் முற்றிலும் வற்றிய நிலையில், முட்புதர்கள் மண்டி தூர்ந்து போன நிலையில் உள்ளன.
இதற்கு முன்பு இந்த ஊருணியில் தண்ணீர் தேங்கி இருந்த போது, இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்த நிலையில் குடிதண்ணீர் பஞ்சம் இல்லாமல் இருந்து வந்தது. தற்போது ஊருணிகள் முழுவதும் காணாமல் போனதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து குடிநீர் பற்றாக்குறை நீடித்து வருகிறது. இந்தநிலையில் விடியலை தேடி என்ற வாட்ஸ்-அப் குழுவை ஆரம்பித்து எங்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்களை அதில் ஒன்று திரட்டினோம்.
இதையடுத்து முதன் முதலாக எங்கள் கிராமத்தில் தூர்ந்து போன நிலையில் இருந்த சசிவர்ண ஏந்தல் என்ற ஊருணியை கண்டுப்பிடித்து அதை தூர்வார முடிவு செய்தோம். அரசை எதிர்பாராமல் எங்களது நண்பர்களின் நிதி உதவி பங்களிப்போடு தற்போது இந்த பணியை ஆரம்பித்துள்ளோம். இதற்காக ஒரு ஜே.சி.பி எந்திரம் மற்றும் டிராக்டர் உதவியோடு தற்போது இந்த ஊருணி சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஊருணிக்கு வரும் தண்ணீர் வரத்துக்கால்வாய்களின் அடைப்புகளை சரி செய்ய உள்ளோம்.
தொடர்ந்து இந்த ஊருணியை சுற்றி பூங்கா அமைத்து அதன் அருகில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் கழிப்பறை கட்டப்பட உள்ளது. தொடர்ந்து இந்த கிராமத்தில் உள்ள பெருமாள்கோவில் ஊருணி, தட்காண்டு ஊருணி, பிள்ளையார்கோவில் ஊருணி ஆகியவற்றை சீரமைப்பு செய்து கிராமம் முழுவதும் ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு மழைவளத்தை பெருக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளோம்.
இதுதவிர இந்த கிராமத்தில் நிலவும் குடிதண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் எங்களது முயற்சியில் குடிதண்ணீர் தொட்டி கட்டும் பணியையும் தொடங்கி பிளாஸ்டிக் இல்லா கிராமமாக உருவாக்க முடிவு செய்துள்ளோம். இதேபோல் மாவட்டத்தில் உள்ள ஏராளமான ஊருணிகள், கால்வாய்கள், கண்மாய்களை அந்தந்த கிராம மக்கள் அரசின் உதவியை எதிர்பாராமல் அவர்களே முன்னின்று அதை மராமத்து செய்து தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story