14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: சபாநாயகரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய பா.ஜனதாவினர்
சபாநாயகரை சந்திக்க முடியாமல் பா.ஜனதா தலைவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பெங்களூரு,
சபாநாயகரை சந்திக்க முடியாமல் பா.ஜனதா தலைவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
சட்டப்படி இல்லை
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி கட்சிகளை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் திடீரென தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதன் பின்னணியில் பா.ஜனதா இருப்பதாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை அக்கட்சி தலைவர்கள் மறுத்து வருகிறார்கள். இந்த நிலையில் ராஜினாமா கடிதங்களை பரிசீலனை செய்யும் பணியை சபாநாயகர் ரமேஷ்குமார் நேற்று தொடங்கினார்.
8 ராஜினாமா கடிதங்கள் சட்டப்படி இல்லை என்று கூறிய அவர், மீண்டும் சம்பந்தப்பட்டவர்கள் நேரில் வந்து ராஜினாமா கடிதம் கொடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார். மீதமுள்ள 5 ராஜினாமா கடிதங்கள் சட்ட வழிமுறைகளின்படி இருப்பதாக சபாநாயகர் கூறினார். அந்த கடிதங்களை கொடுத்த எம்.எல்.ஏ.க்களை விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளார்.
புறப்பட்டு சென்றனர்
சபாநாயகர் நேற்று ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொள்வார் என்றும், அதன் பிறகு இந்த அரசு கவிழும் என்றும் பா.ஜனதா தலைவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை. இதனால் சபாநாயகரின் முடிவால் பா.ஜனதா தலைவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாக சபாநாயகர் மீது பா.ஜனதாவினர் குறை கூற தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் பா.ஜனதா தலைவர்கள் பசவராஜ் பொம்மை, போப்பையா, மாதுசாமி ஆகியோர் சபாநாயகரை நேரில் சந்திக்க விதான சவுதாவுக்கு வந்தனர்.
ஆனால் அலுவலகத்தில் சபாநாயகர் இல்லை. சபாநாயகரின் வருகைக்காக அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால் சபாநாயகர் வராததால், தங்களின் கடிதத்தை சட்டசபை செயலாளரிடம் வழங்கினர். சபாநாயகரை சந்திக்க முடியாமல் அவர்கள் ஏமாற்றத்துடன் புறப்பட்டு சென்றனர்.
Related Tags :
Next Story