பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு


பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 10 July 2019 4:15 AM IST (Updated: 10 July 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பவானிசாகர்,

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் தேசிய நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்படுத்தும் பணிகள் மற்றும் ஜல்சக்தி அபியான் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மத்திய மனிதவள மேம்பாடு, நீர் மேலாண்மை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன்படி பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறை இணை செயலாளர் கல்யாணி தலைமையில், ஜல்சக்தி அபியான் திட்ட துணை செயலளார் முகபத்ரா, நீர் மேலாண்மை விஞ்ஞானி பாபு, கலெக்டர் கதிரவன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அணையின் நீர் இருப்பு, நீர் வரத்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு குறித்து அணை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். மேலும் அணைக்கு நீர்வரத்து, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு, பண்ணை குட்டை மரம் வளர்ப்பு ஆகியவற்றை மேம்படுத்துதல் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்கள்.

அதன்பின்னர் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் தண்ணீர் பற்றாக்குறையுள்ள கிராமங்கள், நிலத்தடி நீர் குறைவாக உள்ள விவசாய பகுதிகளை பார்வையிட்டு நீர் மேலாண்மை குறித்து அறிவுரை வழங்கினார்கள்.

Next Story