வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தஞ்சையில், திறன் விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரி மாணவிகள் பங்கேற்பு
தஞ்சையில் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் திறன் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர்,
வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் ஜூலை மாதம் 2-வது வாரம் தொழில்நெறி வழிகாட்டும் விழிப்புணர்வு வாரம் மற்றும் திறன் விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியாக தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொழில் நெறி வழிகாட்டுதல் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் திறன் விழிப்புணர்வு ஊர்வலம் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடைபெற்றது.
ஊர்வலத்தை கல்லூரி பேராசிரியர் சகாயமேரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் திருச்சி மண்டல வேலைவாய்ப்பு அலுவலக இணை இயக்குனர் அனிதா, தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் சண்முகசுந்தர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக உதவி இயக்குனர் ஜெயமூர்த்தி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பரமேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாணவிகள் பங்கேற்பு
ஊர்வலத்தில் குந்தவை நாச்சியார் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் தொடர்பான நிகழ்ச்சியும், திறன் விழிப்புணர்வு தொடர்பான ஆசிரியர்களுக்கான நிகழ்ச்சியும், இறுதிநாள் தொழிற்பயிற்சி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடை பெறுகிறது.

Related Tags :
Next Story