வாகனத்தில் இருந்து இறக்கும்போது பாட புத்தகங்களை தூக்கி வீசிய ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்


வாகனத்தில் இருந்து இறக்கும்போது பாட புத்தகங்களை தூக்கி வீசிய ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 10 July 2019 4:15 AM IST (Updated: 10 July 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

வாகனத்தில் இருந்து இறக்கும்போது பாடப்புத்தகங்களை அலட்சியமாக தூக்கி வீசியது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதை தொடர்ந்து கல்வித்துறை ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பனைக்குளம்,

தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 1–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு மாணவ–மாணவிகளுக்கு வினியோகிக்கப்பட்டது.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட்டார கல்வி அலுவலகத்திற்கு கடந்த ஜூன் 30–ந்தேதி தனியாருக்கு சொந்தமான சரக்கு வாகனம் மூலம் பழைய பாடப்புத்தகங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த புத்தகங்களை ஊழியர்கள் முறையாக அடுக்கி வைக்காமல் வாகனத்தில் இருந்தபடியே தூக்கி எறிந்தனராம். அவர்கள் இதுபோன்ற அலட்சியமாக புத்தகங்களை கையாண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

அதனைத் தொடர்ந்து இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் கல்வித்துறை உதவியாளர்கள் கார்த்தி, பாண்டி ஆகியோர் புத்தகங்களை அலட்சியமாக வாகனங்களில் இருந்து தூக்கி எறிந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் பணிஇடை நீக்கம் செய்து கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.


Next Story