விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி போட்டி
விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி போட்டி நடந்தது.
விளாத்திகுளம்,
விளாத்திகுளம் அருகே பூசனூர் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி போட்டி நடந்தது. பூசனூர்-விளாத்திகுளம் ரோட்டில் சென்று திரும்பி வரும் வகையில், பந்தய தூரம் அமைக்கப்பட்டு இருந்தது. பூஞ்சிட்டு, பெரிய மாடு, சின்ன மாடு என 3 பிரிவுகளாக போட்டிகள் நடந்தது. நேற்று முன்தினம் மாலையில் நடந்த பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 27 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் பூசனூரைச் சேர்ந்த பிரீத்திஷா மாட்டு வண்டி முதலிடமும், சிங்கிலிபட்டியைச் சேர்ந்த முருகபாண்டி மாட்டு வண்டி 2-வது இடமும், வேப்பங்குளத்தைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மாட்டு வண்டி 3-வது இடமும் பிடித்தது.
நேற்று காலையில் நடந்த பெரிய மாட்டு வண்டி போட்டியில் 7 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் பூசனூரைச் சேர்ந்த பிரீத்திஷா மாட்டு வண்டி முதலிடமும், வெள்ளாங்குளத்தைச் சேர்ந்த கண்ணன் மாட்டு வண்டி 2-வது இடமும், சங்கரப்பேரியைச் சேர்ந்த கருத்தப்பாண்டி மாட்டு வண்டி 3-வது இடமும் பிடித்தது. பின்னர் நடந்த சின்ன மாட்டு வண்டி போட்டியில் 14 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் கம்பத்துப்பட்டியைச் சேர்ந்த வீர சின்னராசு மாட்டு வண்டி முதலிடமும், விருதுநகர் மாவட்டம் அலமேலு மங்காபுரத்தைச் சேர்ந்த ராஜம்மாள் மாட்டு வண்டி 2-வது இடமும், சக்கம்மாள்புரத்தைச் சேர்ந்த பரணி மாட்டு வண்டி 3-வது இடமும் பிடித்தது.
பின்னர் பரிசளிப்பு விழா நடந்தது. பெரிய மாட்டு வண்டி போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.15,001, 2-வது பரிசாக ரூ.12,001, 3-வது பரிசாக ரூ.10,001 வழங்கப்பட்டது. சின்ன மாட்டு வண்டி போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,001, 2-வது பரிசாக ரூ.9,001, 3-வது பரிசாக ரூ.8,001 வழங்கப்பட்டது.
பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.7,001, 2-வது பரிசாக ரூ.6,001, 3-வது பரிசாக ரூ.5,001 வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story