36 டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்


36 டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்
x
தினத்தந்தி 9 July 2019 9:30 PM GMT (Updated: 9 July 2019 8:14 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் 36 டாஸ்மாக் கடைகள் நாளை (வியாழக்கிழமை) மூடப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

தூத்துக்குடி,

நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் வீரன் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழாவையொட்டி நாளை (வியாழக்கிழமை) வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. இதனால் கழுகுமலையில் இருந்து கோவில்பட்டி செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடைகள், கோவில்பட்டி மற்றும் கயத்தார் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த பார்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும்.

அதன்படி, பாண்டவர்மங்கலம் பசுவந்தனை ரோடு, கோவில்பட்டி பசுவந்தனை ரோடு, கோவில்பட்டி கடலையூர் ரோடு, மந்திதோப்பு ரோடு, எப்போதும்வென்றான் சிவஞானபுரம், கயத்தாறு மெயின் ரோடு தளவாய்புரம், செட்டிக்குறிச்சி, அய்யனாரூத்து, பனிக்கர்குளம் ரோடு, பன்னீர்குளம் ரோடு, புதூர், கோவில்பட்டி கிருஷ்ணாநகர், கழுகுமலை செந்தில்நகர், சி.ஆர்.காலனி கரடிகுளம், பன்னீர்குளம் ரோடு ராஜீவ்நகர், விளாத்திகுளம் சித்தவநாயக்கன்பட்டி, குளத்தூர் கீழவைப்பார் ரோடு, ராமேசுவரம் ரோடு, புதூர்பாண்டியாபுரம், ஓட்டப்பிடாரம் மெயின் ரோடு, புதுபச்சேரி, குறுக்குச்சாலை, முப்பிலிபட்டி, குப்பனாபுரம், கடம்பூர், கோவில்பட்டி துரைப்பாண்டிநாடார் காம்பவுண்டு, கடலையூர் ரோடு, ராமசாமி தியேட்டர் அருகில், பண்ணைத்தோட்டம் தெரு, பாண்டவர்மங்கலம் அம்மன்நகர், ஏ.கே.எஸ். தியேட்டர் ரோடு, லட்சுமி மில் அருகில் ஆனந்தா லாட்ஜ் அருகில், கயத்தார் கடம்பூர் ரோடு உள்ளிட்ட இடங்களில் அமைந்து உள்ள 36 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்க வேண்டும். அங்கு மதுபான விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளது.

அன்று மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்தல் போன்றவை கண்டறியப்பட்டால், குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story