விக்கிரமசிங்கபுரத்தில் பரபரப்பு: 7 வயது சிறுமி அடித்துக்கொலை மாடியில் இருந்து தவறி விழுந்ததாக நாடகமாடிய தாய்-தந்தை கைது
விக்கிரமசிங்கபுரத்தில் 7 வயது சிறுமி அடித்துக்கொலை செய்யப்பட்டாள். அவள் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடிய தாய்-தந்தை கைது செய்யப்பட்டனர்.
விக்கிரமசிங்கபுரம்,
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் ராமலிங்க புரம் பூந்தோட்ட தெருவை சேர்ந்தவர் கைலாஷ். இவர் பெட்டிக்கடை நடத்தி வரு கிறார். அவருடைய மனைவி நீலாவதி. இவர் களுக்கு ஐஸ்வர்யா (வயது 13), சுகிர்தா (7) என்ற இரண்டு மகள்கள்.
மூத்த மகள் ஐஸ்வர்யா ஆழ்வார்குறிச்சியில் தங்கி யிருந்து படித்து வருகிறாள். பெற்றோருடன் இருந்த சுகிர்தா, அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். கைலாசுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மது குடித்துவிட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள் ளார்.
நேற்று முன்தினம் இரவு கைலாஷ் வழக்கம்போல் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்தார். இதை பார்த்த சிறுமி சுகிர்தா கதறி அழுதபடி சண்டையை நிறுத்துமாறு கூறினாள். ஆனாலும் சண்டையை நிறுத்தாத கைலாஷ், தனது மனைவியை ஓங்கி அடிக்க முயன்றபோது குறுக்கே வந்த மகள் மீது பலமாக அடி விழுந்ததாக தெரிகிறது. இதில் சிறுமி சுகிர்தா சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தாள்.
இது தெரியாமல் சிறுமி மயங்கி விட்டதாக கருதி, சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் களிடம், வீட்டின் மாடியில் இருந்து தங்களுடைய மகள் தவறி கீழே விழுந்து விட்டதாக கூறியுள்ளனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து சிறுமி இறந்து விட்டதாக தெரிவித் தனர். இதைத்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், மகளின் உடலை பார்த்து கதறி அழுத னர். இதையடுத்து மகளின் உடலை பெற்றுக் கொண்டு வீட்டுக்கு சென்றனர். பின்னர் நேற்று காலை சிறுமியின் உடலை அடக்கம் செய்வதற் கான ஏற்பாடுகளை உறவினர் கள் செய்து வந்தனர்.
ஆனாலும் இச்சம்பவம் தொடர்பாக சந்தேகம் அடைந்த அம்பை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், இதுபற்றி விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகிர் உசேன், விக்கிரமசிங்கபுரம் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி ஆகியோர் நேற்று காலை சிறுமியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பெற்ற மகளை தந்தையே அடித்துக் கொலை செய்ததும், மாடியில் இருந்து தவறி விழுந்ததாக நாடகமாடியதும் தெரிய வந்தது. பின்னர் சிறுமியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, கைலாசை கைது செய்தனர். மேலும் இந்த கொலையை மறைக்க உடந்தையாக இருந்ததாக சிறுமியின் தாய் நீலாவதியும் கைது செய்யப்பட்டார். குடும்ப தகராறில் விபரீதமாக சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story