நெல்லித்தோப்பு மார்க்கெட்டில் தலையில் கல்லைபோட்டு வாலிபர் படுகொலை
புதுவை நெல்லித்தோப்பு மார்க்கெட்டில் தலையில் கல்லை தூக்கிப்போட்டு வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.
புதுச்சேரி,
புதுவை சண்முகாபுரத்தை சேர்ந்தவர் தமிழ்வாணன் (வயது 35). இவர் நெல்லிதோப்பு மார்க்கெட்டில் கோழிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். திருமணமாகாத இவர் இரவு நேரங்களில் அங்கேயே தங்கினார்.
தமிழ்வாணனுக்கும், நெல்லிதோப்பு மார்க்கெட்டில் காய்கறி கடை ஒன்றில் வேலை பார்க்கும் எல்லைப்பிள்ளைசாவடியை சேர்ந்த தேவா என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இருவரும் அவ்வப்போது மது குடித்துவிட்டு சண்டை போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்குள்ள கடைக்காரர்கள் அவர்களை சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின் தமிழ்வாணனும், தேவாவும் தூங்கச் சென்றுவிட்டனர்.
இந்தநிலையில் நேற்று காலை தேவா முதலில் விழித்துள்ளார். தமிழ்வாணன் தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்ததும் அவருக்கு மேலும் ஆத்திரம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு கிடந்த கல் ஒன்றை எடுத்து தமிழ்வாணனின் தலையில் போட்டார்.
இதில் மண்டை உடைந்த தமிழ்வாணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக செத்தார். இதைத்தொடர்ந்து தேவா அங்கிருந்து ஓடிவிட்டார்.
காலையில் மார்க்கெட்டிற்கு வந்தவர்கள் தமிழ்வாணன் பிணமாக கிடப்பதை கண்டு உருளையன்பேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா, போலீஸ் சூப்பிரண்டு செல்வம், இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், செந்தில்குமார் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த கொலை தொடர்பாக உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழ்வாணனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கும் அனுப்பிவைத்தனர். தமிழ்வாணனை கொலை செய்த தேவா தற்போது உருளையன்பேட்டை போலீசில் சிக்கியிருப்பதாக தெரிகிறது. அவரை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொலை காரணமாக நெல்லித்தோப்பு மார்க்கெட் பகுதியில் நேற்று காலை சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Related Tags :
Next Story