பெண் கைதி கொலை வழக்கு ஜெயிலர், சிறை காவலர்களுக்கு ஜாமீன் மறுப்பு ஐகோர்ட்டு உத்தரவு
சிறையில் கைதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஜெயிலர், சிறை காவலர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மும்பை,
சிறையில் கைதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஜெயிலர், சிறை காவலர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பெண் கைதி கொலை
மும்பை பைகுல்லா பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த கைதி மஞ்சுளா கடந்த 2017-ம் ஆண்டு ஜெயில் காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஜெயிலர் மனிஷா, சிறை காவலர்கள் பிந்து, வாசிமா சேக், சீத்தல், சுரேக்கா, ஆர்த்தி ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கு விசாரணை சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. 6 பேர் மீதும் கொலை, தடயத்தை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஜாமீன் மறுப்பு
இவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார்கள். இந்தநிலையில், 6 பேரும் ஜாமீன் கோரி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்றுமுன்தினம் நடந்தது. அப்போது, அரசு தரப்பில் அவர்களை ஜாமீனில் விட்டால் சாட்சிகளை அழிக்க கூடும் என வாதிடப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 6 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story