பண்ருட்டி அருகே, சிறுமி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


பண்ருட்டி அருகே, சிறுமி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 July 2019 4:00 AM IST (Updated: 10 July 2019 6:02 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கடலூர், 

பண்ருட்டியை சேர்ந்த 15 வயது சிறுமி சம்பவத்தன்று இரவு தனது தாயாருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். பின்னர் மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது அந்த சிறுமியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய், பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சிறுமி அவரது வீட்டுக்கு வந்தார். அவரிடம் விசாரித்தபோது விலங்கல்பட்டு மாரியம்மன் கோவில் மேட்டுத்தெருவை சேர்ந்த பாவாடை மகன் ஸ்ரீதர்(25) என்பவர், சிறுமியை அவரது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், ஸ்ரீதர் வீட்டுக்கு சென்று அவரது தாய், தந்தையிடம் தட்டிக்கேட்டார். அப்போது அவர்கள் சிறுமியின் தாயை திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் ஸ்ரீதர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் வனஜா வழக்குப் பதிவு செய்து கைது செய்தார். மேலும் அதற்கு உடந்தையாக இருந்ததாக ஸ்ரீதரின் தந்தை பாவாடை, தாய் கீதா ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story