வானவில் : ஸ்மார்ட் செராமிக் மக்
செராமிக் கோப்பை நீங்கள் சாப்பிடும் காபி சூடு மாறாத அளவுக்கு வைத்திருக்கும்.
பொதுவாக காபி அல்லது தேநீர் சாப்பிடுவது என்பதே புத்துணர்வு கிடைக்கும் என்பதற்காகத்தான். ஆனால் வேலைப் பளு அழுத்தும் சமயம், பல நேரங்களில் சூடான காபி டேபிளுக்கு வந்தாலும் வேலையில் மறந்து ஆறிப் போன காபியை வெறுப்புடன் அருந்தும் நிகழ்வுதான் பலருக்கும் ஏற்படும்.
இத்தகைய நிலையைப் போக்க வந்துள்ளதுதான் ஸ்மார்ட்மக். செராமிக் கோப்பை நீங்கள் சாப்பிடும் சூடு மாறாத அளவுக்கு வைத்திருக்கும். இதை ஸ்மார்ட்போன் மூலமும் இயக்க முடிவது கூடுதல் சிறப்பு. இதனால் அலுவலக மேஜையில் இந்த கோப்பையில் காபியை ஊற்றி வைத்தாலும் ஒரு மணி நேரம் கழித்து வந்தாலும் சூடான காபி உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். இதன் விலை ரூ.12,000.
Related Tags :
Next Story