வானவில் : ரியல் மி எக்ஸ் ஸ்பைடர் மேன் எடிஷன்
ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்னணியில் திகழும் ரியல்மி நிறுவனம் ஸ்பைடர்மேன் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்த இந்த மாடல் தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘ஸ்பைடர் மேன் பார் பிரம் ஹோம்’ என்ற திரைப்படம் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைக் கொண்டாடும் விதமாக சிறப்பு எடிஷனாக இந்த மாடல் போனை நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ஸ்பைடர் மேன் லோகோ ஸ்மார்ட்போனின் பின் பகுதியில் உள்ளது. அதேபோல வால் பேப்பரும் ஸ்பைடர் மேன் உருவம் தோன்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மற்றபடி ரியல்மி எக்ஸ் மாடலில் உள்ள அனைத்து அம்சங்களும் இதில் உள்ளன. 6.53 அங்குலம் அமோலெட் தொடு திரையைக் கொண்டதாக இது வந்துள்ளது. இதில் கொரில்லா கிளாஸ் 5 பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 2.2 கிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிரான் 710 பிராசஸர் உள்ளது. ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தில் இது செயல்படக் கூடியது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக இதில் 3,765 எம்.ஏ.ஹெச். பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. விரைவாக சார்ஜ் ஆவதற்கு வசதியாக இதில் வி.ஓ.ஓ.சி 3.0 பிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படும் இரண்டு கேமராக்கள் பின்பகுதியில் உள்ளன. 53 மெகா பிக்ஸெல் திறன் கொண்டதால் கேமராவில் எடுக்கப்படும் புகைப்படங்கள் போன்ற துல்லியம் இதில் கிடைக்கும். பிரதான கேமரா 48 மெகா பிக்ஸெல்லும் இரண்டாவது கேமரா 5 மெகா பிக்ஸெல்லும் கொண்டது. முன்பக்கத்தில் 16 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது, செல்பி பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். 8 ஜி.பி. ரேம் கொண்டது. இதன் நினைவகத்தை 256 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்யும் வசதி கொண்டது.
Related Tags :
Next Story