வானவில் : ஆட்டோமேடிக் கியர் வசதியுடன் வந்துவிட்டது மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 டீசல்


வானவில் : ஆட்டோமேடிக் கியர் வசதியுடன் வந்துவிட்டது மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 டீசல்
x
தினத்தந்தி 10 July 2019 6:14 PM IST (Updated: 10 July 2019 6:14 PM IST)
t-max-icont-min-icon

மஹிந்திரா நிறுவனத்தின் சமீபத்திய வரவு எக்ஸ்.யு.வி 300.

எஸ்.யு.வி. தயாரிப்பில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள மஹிந்திரா நிறுவனத்தின் சமீபத்திய வரவு எக்ஸ்.யு.வி 300. இதில் தற்போது டீசல் மாடல் அறிமுகமாகியுள்ளது. அதில் ஏ.எம்.டி. எனப்படும் ஆட்டோமேடிக் கியர் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்ட எக்ஸ்.யு.வி 300 அறிமுகமாகியுள்ளது. இதில் ஆரம்ப மாடலான டபிள்யூ 8 விலை ரூ.11.50 லட்சமாகும். இதில் பிரீமியம் மாடலான டபிள்யூ 8 (ஓ) மாடல் விலை ரூ.12.70 லட்சமாகும். எக்ஸ்.யு.வி. 300 ஏ.எம்.டி. 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜினுடன் வந்துள்ளது. மானுவல் கியர் டிரான்ஸ்மிஷன் மாடலில் உள்ள அதே என்ஜின்தான் இதிலும் உள்ளது. இது 117 ஹெச்.பி. திறனும், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையும் கொண்டது. இதில் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதிக்காக மரேலி நிறுவன தொழில்நுட்பத்தை மஹிந்திரா நிறுவனம் பெற்றுள்ளது. இந்த கியர் பாக்ஸில் ஆட்டோ மற்றும் மானுவல் என்ற இரண்டு வகையான வசதிகள் உள்ளன.

இந்த மாடலில் 17 அங்குல அலாய் சக்கரமும் பாதுகாப்பு வசதிக்கு இரட்டை ஏர்பேக்கும் உள்ளது. அத்துடன் ஹில் ஹோல்ட், இ.எஸ்.பி., முன்புறமும்,  பின்புறமும் பாக் விளக்கு (பனி சூழ்ந்த பகுதிகளிலும் இது சிறப்பாக ஒளியை வீசும்), பகலில் எரியும் டி.ஆர்.எல். ஆகியன வெளிப்புறத்தையும் என்ஜினையும் சார்ந்தவை.

இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, பொத்தானில் காரை இயக்குவது போன்ற வசதிகள் உள்ளன. இதில் டபிள்யூ 8 (ஓ ஆப்ஷனல்) மாடலில் கூடுதலாக 5 ஏர் பேக்குகளைப் பெறலாம். பக்கவாட்டிலும், டிரைவரின் முழங்கால் பகுதியையும் பாதுகாக்க இந்த ஏர்பேக்குகள் கூடுதலாக அளிக்கப்படுகின்றன. சன் ரூப் வசதி, கார் டயரின் காற்று அழுத்தத்தைக் கண்காணிக்கும் வசதி, முன்புற பார்க்கிங் சென்சார் உள்ளிட்டவையும் இதில் உள்ள அம்சங்களாகும்.

இந்தப் பிரிவில் டாடா நெக்ஸான் (8.94 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வரை) மற்றும் விடாரா பிரீஸா (ரூ.8.70 லட்சம் முதல் ரூ.10.43 லட்சம் வரை) மாடல்களை விட இதன் விலை அதிகமாகும். ஆனால் இந்தப் பிரிவில் இதில்தான் அதிக திறன் கொண்ட என்ஜின் உள்ளது. அந்த வகையில் இந்த மாடல் மிகச் சிறந்த வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

Next Story