மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சினையால், விஷம் குடித்து பெண் போலீஸ் தற்கொலை முயற்சி + "||" + Due to family problems Poison-drinking woman police Attempted suicide

குடும்ப பிரச்சினையால், விஷம் குடித்து பெண் போலீஸ் தற்கொலை முயற்சி

குடும்ப பிரச்சினையால், விஷம் குடித்து பெண் போலீஸ் தற்கொலை முயற்சி
குடும்ப பிரச்சினையால் விஷம் குடித்து பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே உள்ள தாமரைப்பாடி கல்லாத்துப்பட்டியை சேர்ந்தவர் டேனியல். இவருடைய மனைவி கங்காதேவி (வயது 33). இவர், திண்டுக்கல் ஆயுதப்படையில் போலீசாக உள்ளார். தம்பதியினருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். டேனியல் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்றும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது வேலைக்கு செல்லாமல் இருப்பது குறித்து கங்காதேவி கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டேனியல் மனைவியை திட்டியதாக தெரிகிறது.

இதில் மனமுடைந்த கங்காதேவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன் றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்றது குறித்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இருந்த போதிலும் தற்கொலை முயற்சிக்கு பணிச்சுமை போன்ற வேறு காரணங்கள் ஏதும் உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.