மாவட்ட செய்திகள்

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் + "||" + Cotton Auctions at Thiruvarur Regulatory Sales Center

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் நெல்லுக்கு மாற்றாக பருத்தி சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ஆண்டு 6 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெற்றுள்ளது.


விவசாயிகள் தங்களது பருத்தியை உரிய விலைக்கு விற்பனை செய்வதற்காக திருவாரூர், குடவாசல், வலங்கைமான் ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பருத்தி ஏலம் நடைபெறுகிறது. அதன்படி நேற்று முன்தினம் திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது.

இதில் திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது பருத்தியை மறைமுக ஏலத்துக்கு கொண்டு வந்தனர். இந்த ஏலத்தில் செம்பனார்கோவில், திருப்பூர் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் வித்யா, மேலாளர் ஜாய்பெலிக்ஸ், கண்காணிப்பாளர் செந்தில்முருகன், மேற்பார்வையாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டியை திறந்து வியாபாரிகள் கேட்ட விலையை படித்தனர்்.

இதில் அதிகபட்சமாக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.6,049-க்கும், குறைந்தபட்சமாக ரூ.5,526-க்கும், சராசரியாக ரூ.5,873-க்கும் விலை போனது. ஏலத்தில் ரூ.84 லட்சத்து 3 ஆயிரத்து 717 மதிப்பிலான பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 639-க்கு விலைபோனது
பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 639-க்கு விலைபோனது.
2. கும்பகோணத்தில் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்
கும்பகோணத்தில் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
3. கொரடாச்சேரி ஒன்றியத்தில் கடும் வெப்பத்தால் வறண்டு வரும் குளங்கள் குறுவை சாகுபடி பாதிக்கும் அபாயம்
கொரடாச்சேரி ஒன்றியத்தில் கடும் வெப்பத்தால் குளங்கள் வறண்டு வருவதால் குறுவை சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
4. குறுவை சாகுபடியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
குறுவை சாகுபடியை தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
5. தூத்துக்குடியில் இருந்து சரக்குரெயிலில் 1,281 டன் உரம் தஞ்சைக்கு வந்தது
தூத்துக்குடியில் இருந்து சரக்குரெயிலில் 1,281 டன் உரம் தஞ்சைக்கு வந்தது.