போலீஸ் நிலையம் முன்பு டிக்-டாக் செயலியில் வீடியோ எடுத்த 3 பேர் கைது
போலீஸ் நிலையம் முன்பு டிக்-டாக் செயலியில் வீடியோ எடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை சேர்ந்தவர் ஆதிகேசவன் (வயது 20). அதேபகுதியை சேர்ந்தவர் 18 வயது வாலிபர். நண்பர்களான இவர்கள் 2 பேரும் அடிதடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் நேற்று முன்தினம் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வந்தனர். அப்போது ஆதிகேசவன், அவருடைய நண்பர் மற்றும் இவர்களுடன் வந்த 15 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் போலீஸ் நிலையம் முன்பு செல்போனில் படம் பிடித்து டிக்-டாக் செயலியில் வெளியிட்டனர். இதுதொடர்பாக கேட்ட போலீஸ் ஏட்டுவிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story