சட்ட வழிமுறைகளுக்கு பிறகே ராஜினாமா கடிதங்கள் அங்கீகரிக்கப்படும் சபாநாயகர் ரமேஷ்குமார் பேட்டி


சட்ட வழிமுறைகளுக்கு பிறகே ராஜினாமா கடிதங்கள் அங்கீகரிக்கப்படும் சபாநாயகர் ரமேஷ்குமார் பேட்டி
x
தினத்தந்தி 11 July 2019 3:30 AM IST (Updated: 11 July 2019 12:09 AM IST)
t-max-icont-min-icon

சட்ட வழிமுறைகளுக்கு பிறகே ராஜினாமா கடிதங்கள் அங்கீகரிக்கப் படும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் கூறினார்.

பெங்களூரு, 

சட்ட வழிமுறைகளுக்கு பிறகே ராஜினாமா கடிதங்கள் அங்கீகரிக்கப் படும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் கூறினார்.

கூட்டணி அரசுக்கு ஆபத்து

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடந்து வருகிறது. இந்த நிலையில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் திடீரென தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். அதில் 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் மட்டுமே சட்டத்திற்கு உட்பட்டு உள்ளதாகவும், 8 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் சட்டப்படி இல்லை என்றும் சபாநாயகர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் அந்த 8 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் நிராகரித்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் நேற்று ராஜினாமா செய்தனர். இதுகுறித்து சபாநாயகர் ரமேஷ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுதாகர், எம்.டி.பி.நாகராஜ் இன்று (அதாவது நேற்று) ராஜினாமா கடிதத்தை என்னிடம் கொடுத்துள்ளனர். அந்த கடிதங்கள் சட்டப்படி உள்ளது. அதனால் வருகிற 17-ந் தேதி அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை யாருடைய ராஜினாமா கடிதத்தையும் அங்கீகரிக்கவில்லை.

அரசு கவிழ்ந்துவிடும்

சட்ட வழிமுறைகளின்படியே ராஜினாமா கடிதங்கள் அங்கீகரிக்கப்படும். 12-ந் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதில் நிதி மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். ஒருவேளை அந்த மசோதா தோல்வி அடைந்தால், இந்த அரசு கவிழ்ந்துவிடும். பா.ஜனதா குழுவினர் என்னை சந்தித்து பேசினர். நிதி மசோதாவுக்கு இந்த அரசு இன்னும் ஒப்புதல் பெறவில்லை. அதனால் ராஜினாமா கடிதங்கள் மீது விரைவாக முடிவு எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

இவ்வாறு ரமேஷ் குமார் கூறினார்.

Next Story