பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது குமாரசாமி பதவி விலகுகிறார்?
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை நாளை (வெள்ளிக்கிழமை) கூடுகிறது. அப்போது குமாரசாமி பதவி விலகுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு,
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை நாளை (வெள்ளிக்கிழமை) கூடுகிறது. அப்போது குமாரசாமி பதவி விலகுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடந்து வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் கடந்த 6-ந் தேதி ராஜினாமா செய்தனர். நேற்று மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களுடன் சேர்த்து இதுவரை 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் அங்கீகரித்தால், கூட்டணி அரசு தானாகவே கவிழ்ந்துவிடும்.
அதாவது கூட்டணி அரசின் எம்.எல்.ஏ.க்களின் பலம் சபாநாயகரை தவிர்த்து 100 ஆக குறைந்துவிடும். பா.ஜனதாவுக்கு 107 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நாளை (வெள்ளிக்கிழமை) பெங்களூரு விதான சவுதாவில் தொடங்குகிறது.
பரபரப்பான காட்சிகள்
இந்த கூட்டத்தில், பா.ஜனதா கட்சி, எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரத்தை எழுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய குமாரசாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் இன்று (வியாழக்கிழமை) பதவி விலகுவார் என்று தெரிகிறது. கர்நாடக அரசியலில் இன்று பரபரப்பான காட்சிகள் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story