ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க முப்பெரும் விழா


ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க முப்பெரும் விழா
x
தினத்தந்தி 11 July 2019 4:00 AM IST (Updated: 11 July 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம் திருமானூரில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூரில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு சங்க மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் சிதம்பரம் வரவேற்றார். இதில் சங்க மாநில துணைத் தலைவர் கண்ணன், மாவட்ட தலைவர் முருகேசன் மற்றும் அரியலூர் மாவட்ட கருவூல அதிகாரி நடராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 75, 85 மற்றும் 95 வயது நிறைவு செய்த சங்க உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா, சங்கத்தின் 17-ம் ஆண்டு தொடக்க விழா, மற்றும் சங்கம் நிர்ணயித்த ஆண்டு வளர்ச்சி நிதியை விட அதிக தொகை வழங்கிய உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா ஆகியவை சேர்த்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. இதில் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story