ஆசிரியர்களின் பணியிட மாற்றத்தை கண்டித்து மாணவ-மாணவிகள் சாலை மறியல்
ராதாபுரம் அரசு பள்ளியில் 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராதாபுரம்,
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கணக்கு பதிவியல் ஆசிரியராக ரவீந்திரன் என்பவரும், உடற்கல்வி ஆசிரியராக வளன் என்பவரும் பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில் ரவீந்திரன் தென்காசியில் உள்ள ஒரு பள்ளிக்கும், வளன் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளத்தில் உள்ள ஒரு பள்ளிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து அறிந்த பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்த கோரி பள்ளி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ராதாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது போலீசார் நீங்கள் இதுகுறித்து சேரன்மாதேவி கல்வி மாவட்ட அலுவலரிடம் மனு கொடுங்கள் என்றனர். அதனை தொடர்ந்து மாணவ-மாணவிகள் அங்கிருந்து கலைந்து தங்கள் வகுப்பறைகளுக்கு சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story