வாய்க்கால்கள், வடிகால்களை குடிமராமத்து செய்யும் பாசன சங்கங்களின் நிர்வாகிகளுக்கு பயிற்சி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
வாய்க்கால்கள், வடிகால்களை குடிமராமத்து செய்யும் பாசன சங்கங்களின் நிர்வாகிகளுக்கான பயிற்சியை கலெக்டர் அன்புசெல்வன் தொடங்கி வைத்தார்.
கடலூர்,
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி கடலூர் மாவட்டத்தி்ல குடிமராமத்து திட்டத்தின் கீழ் பாசன வாய்க்கால்கள், வடிகால்கள் மற்றும் ஏரிகளை தூர்வாருவதற்காக ரூ 8 கோடியே 15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 36 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிகள் 36 பாசன சங்கங்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இந்த பாசன சங்கங்களை சார்-பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்வது எப்படி?, சங்கத்துக்கு ஜி.எஸ்.டி. எண் வாங்குவது எப்படி? என்பது பற்றி பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அதிகாரிகள் மூலம் சங்க நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியை கலெக்டர் அன்புசெல்வன் தொடங்கி வைத்து பேசியதாவது:-
குடிமராமத்து பணிகளை செய்யும் செலவில் அதிகபட்ச பலன்களை விவசாயிகள் அடைய வேண்டும் என்பதற்காக குடிமராமத்து பணிகளை பாசன சங்கங்களிடம் ஒப்படைத்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். எனவே பாசன சங்க நிர்வாகிகள் இந்த பணிகளை எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல், தரக்கட்டுப்பாட்டுடன் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் அன்பு செல்வன் பேசினார்.
பின்னர் பாசன சங்கங்களை பதிவு செய்வது எப்படி என்பது பற்றி சார்பதிவாளர் அலுவலக அதிகாரியும், சங்கத்தின் பெயரில் ஜி.எஸ்.டி. எண் பெறுவது எப்படி என்பது பற்றி வணிகவரித்துறை அதிகாரியும் பயிற்சி அளித்தனர். இதில் முன்னோடி விவசாயி தானூர் சண்முகம் உள்பட 36 பாசன சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story