மாவட்ட செய்திகள்

கோவை குனியமுத்தூரில், இந்து முன்னணி பிரமுகர் மீது தாக்குதல் - 4 பேருக்கு வலைவீச்சு + "||" + In Coimbatore Kuniyamuttur, The Hindu Front Figurehead Attack on

கோவை குனியமுத்தூரில், இந்து முன்னணி பிரமுகர் மீது தாக்குதல் - 4 பேருக்கு வலைவீச்சு

கோவை குனியமுத்தூரில், இந்து முன்னணி பிரமுகர் மீது தாக்குதல் - 4 பேருக்கு வலைவீச்சு
கோவை குனியமுத்தூரில் இந்து முன்னணி பிரமுகரை தாக்கிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:-
போத்தனூர்,

கோவை குனியமுத்தூர் அருகே திருவள்ளுவர்நகரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 30). இந்து முன்னணி நகர செயலாளர். இவர், குனியமுத்தூரில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். இவர், சம்பவத் தன்று நள்ளிரவு 12 மணியளவில் தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

அப்போது அங்கு முகத்தில் கைக்குட்டையை மறைத்து கட்டியபடி 4 மர்மநபர்கள் உட்கார்ந்து இருந்தனர். அவர்கள் திடீரென்று பெரியசாமியை வழிமறித்து தடுத்து நிறுத்தினர். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர்கள் 4 பேரும் சேர்ந்து இரும்பு கம்பியாலும், கைகளாலும் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சத்தம் போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதையடுத்து பெரியசாமி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த தகவல் கிடைத்ததும் குனியமுத்தூர் போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பெரியசாமியிடம் விசாரணை நடத்தினர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாமியை தாக்கிய அடையாளம் தெரியாத மர்மநபர்கள் 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்து முன்னணி பிரமுகர் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் குனியமுத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. உத்தர பிரதேசத்தில் மாணவிகளிடம் தவறாக நடந்த மாணவர்களை திட்டிய ஆசிரியர் மீது கடும் தாக்குதல்
உத்தர பிரதேசத்தில் மாணவிகளிடம் தவறாக நடந்த மாணவர்களை திட்டிய ஆசிரியர் கடுமையாக தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது.
2. படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த, மாணவர்களை கண்டித்த பஸ் கண்டக்டர் மீது சரமாரி தாக்குதல்
படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை கண்டித்த பஸ் கண்டக்டர் சரமாரியாக தாக்கப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் தனியார் கல்லூரியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. கொலம்பியாவில் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலில் பழங்குடி மக்கள் 5 பேர் பலி
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், ஆயுதக்குழு நடத்திய தாக்குதலில் பழங்குடி மக்கள் 5 பேர் பலியாகினர்.
4. அசாமில் காட்டு யானை தாக்கி 5 பேர் சாவு
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
5. பவானியில் பரபரப்பு: பட்டாசு வெடிப்பதில் தகராறு; வீடு அடித்து நொறுக்கப்பட்டது; கணவன்-மனைவி உள்பட 4 பேர் மீது தாக்குதல்
பவானியில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் வீடு அடித்து நொறுக்கப்பட்டது. மேலும் கணவன்-மனைவி உள்பட 4 பேர் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.