பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்


பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 11 July 2019 10:30 PM GMT (Updated: 11 July 2019 6:35 PM GMT)

பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள லட்சுமிபுரம் அங்கன்வாடி மையம் அருகே சத்துணவு திட்டத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்னும் திட்டத்தின் வாயிலாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர், பெண் குழந்தைகளின் விகிதாச்சாரத்தை அதிகரித்து விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஒட்டி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

பின்னர் கலெக்டர் திருவள்ளூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுடன் கலந்துரையாடி கேள்விகளை கேட்டார். சிறப்பாக பதில் அளித்த மாணவிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து நினைவு பரிசுகளை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற கலெக்டர் பெண் குழந்தைகளின் பெற்றோர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட சமூகநல அலுவலர் மீனா, ஒருங்கிணைத்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் தயாளன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணராஜ், திருவள்ளூர் தாசில்தார் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story