பிளாஸ்டிக் தடை என்ற பெயரில் “அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பது சில்லறை வியாபாரிகளை அழிக்கும் செயல்” வெள்ளையன் பேட்டி
“பிளாஸ்டிக் தடை என்ற பெயரில் அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பது சில்லறை வியாபாரிகளை அழிக்கும் செயல்“ என்று வெள்ளையன் கூறினார்.
தூத்துக்குடி,
“பிளாஸ்டிக் தடை என்ற பெயரில் அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பது சில்லறை வியாபாரிகளை அழிக்கும் செயல்“ என்று வெள்ளையன் கூறினார்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் நேற்று தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
குழப்பம்
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை நடவடிக்கை மிகப்பெரிய குழப்பமாக உள்ளது. அரசின் அறிவிக்கை தெளிவாக இருந்தால் அதிகாரிகள் நடவடிக்கை நன்றாக இருக்கும். அதிகாரிகளின் நடவடிக்கையில் குழப்பம் இருந்தால் லஞ்சம் தான் அதிகரிக்கும். மளிகைப்பொருட்களுடன் சேர்த்து விற்பனை செய்யும் பிளாஸ்டிக் பை மறுசுழற்சி செய்யத்தக்கது. ஆனால் அதிகாரிகள் அந்த பிளாஸ்டிக் பைக்கும் சேர்த்து அபராதம் விதிக்கிறார்கள்.
சில தானியங்கள் மூட்டையில் இருந்தால் வண்டுகள் மொய்ப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் பிளாஸ்டிக் பை போன்றவற்றில் அடைத்து வைக்க வேண்டிய நிலை உள்ளது. பிளாஸ்டிக் தடை என்ற பெயரில் அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பது சில்லறை வியாபாரிகளை அழிக்கும் செயலாக உள்ளது.
போராட்டம்
பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் தொழிலை அரசு ஊக்கப்படுத்த வேண்டும். மறுசுழற்சி செய்பவர்களுக்கு இலவச மின்சாரம், வட்டி இல்லா கடன் வழங்க வேண்டும். எதை செய்ய வேண்டுமோ அதை இந்த அரசு செய்யவில்லை. அதிகாரிகள் நெருக்கடி போக்கு மூலம் வியாபாரிகளை அழிக்க நினைக்கிறார்கள். இதை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story