வீரதீர செயல் புரிந்த பெண்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் 31-ந்தேதி கடைசி நாள்


வீரதீர செயல் புரிந்த பெண்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் 31-ந்தேதி கடைசி நாள்
x
தினத்தந்தி 12 July 2019 3:00 AM IST (Updated: 12 July 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

வீரதீர செயல் புரிந்த பெண்கள் மாநில அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க வருகிற 31-ந்தேதி கடைசிநாள் ஆகும்.

தூத்துக்குடி, 

வீரதீர செயல் புரிந்த பெண்கள் மாநில அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க வருகிற 31-ந்தேதி கடைசிநாள் ஆகும்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

விருது

பெண் கல்வி, பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணம் தடுத்தல், சமூக அவலங்கள் மற்றும் அதனை தீர்வு காண்பதற்கான புத்தகங்கள் மற்றும் கையேடு எழுதி வெளியிட்டவர்கள், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பது போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்ற வீரதீரசெயல் புரிந்த 5 முதல் 18 வயதிற்குட்ட பெண்களுக்கு மாநில அரசு சார்பில் பெண் குழந்தை தினமான ஜனவரி 24-ந்தேதி விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி 2019-ம் ஆண்டுக்கான விருது வருகிற 2020-ம் ஆண்டு ஜனவரி 24-ந்தேதி வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பம்

இந்த விருது பெற தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை மாவட்ட சமூக நல அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் என்ற முகவரியில் வருகிற 31-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 0461-2325606 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story