மாவட்ட செய்திகள்

சாலமங்கலம் ஊராட்சியில் நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க கோரிக்கை + "||" + In Local Middle School Request to revamp the circuit wall

சாலமங்கலம் ஊராட்சியில் நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க கோரிக்கை

சாலமங்கலம் ஊராட்சியில் நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க கோரிக்கை
பல ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் அருகில் இருந்த ஊராட்சிக்கு சொந்தமான நீர்த்தேக்க தொட்டியை இடிக்கும்போது இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த சாலமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் அருகில் இருந்த ஊராட்சிக்கு சொந்தமான நீர்த்தேக்க தொட்டியை இடிக்கும்போது இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் போது ஆடு, மாடுகள் மற்றும் நாய்கள் பள்ளியின் உள்ளே அடிக்கடி வந்து செல்கிறது. இதனால் மாணவர்கள் அச்சத்துடன் உள்ளனர். ஒரு சில நேரங்களில் மாணவ-மாணவிகள் வெளியே வந்து விடுகின்றனர்.

இந்த பகுதியில் வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் நலன் கருதி பள்ளியின் சுற்றுச்சுவரை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குமாரச்சேரி ஊராட்சியில் குளம் தூர் வாரும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
குமாரச்சேரி ஊராட்சியில் மும்மாரி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் குமாரச்சேரி காலனி குளத்தை தூர் வாரி கரையை பலப்படுத்தும் பணி நடைபெற்றது.
2. இருளஞ்சேரி ஊராட்சியில் சுடுகாட்டை சூழ்ந்து நிற்கும் மழைநீர் பொதுமக்கள் அவதி
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் மழை பெய்தது. வரத்து கால்வாய் அடைப்பால் மழை நீர் அனைத்தும் சுடுகாட்டை சூழ்ந்து நிற்கிறது.