பெருந்துறையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கிவைத்தார்


பெருந்துறையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கிவைத்தார்
x
தினத்தந்தி 11 July 2019 10:15 PM GMT (Updated: 11 July 2019 10:05 PM GMT)

பெருந்துறையில் நடந்த மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் தொடங்கிவைத்தார்.

பெருந்துறை,

பெருந்துறையில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இந்த ஊர்வலத்தை கலெக்டர் கதிரவன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணைச்செயலாளர் கல்யாணி முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் மாணவ- மாணவிகள் 300 பேர் கலந்து கொண்டு மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேனர்களை எடுத்துச்சென்றனர்.

ஈரோடு ரோடு, போலீஸ் நிலைய ரோடு, பழைய பஸ் நிலைய ரோடு, கோவை ரோடு வழியாகச் சென்று, இறுதியில் பள்ளிக்கூடத்தில் ஊர்வலம் முடிந்தது.

இதேபோல் சிவகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் பரமேஸ்வரி தலைமை தாங்கி, ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் யசோதா வரவேற்று பேசி னார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் குணசேகரன், கல்விக்குழுத் தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் பள்ளியில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் சென்ற மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திச்சென்றனர். மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில், ஆசிரிய-ஆசிரியைகள், சிவகிரி போலீசார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியர் அன்னபூரணி நன்றி கூறினார்.

கொடுமுடி ஸ்ரீ சங்கர வித்யாசாலா மேல்நிலைப்பள்ளியில் மழைநீர் சேமிப்பதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் கோபி கலந்துகொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளிக்கூடத்தில் தொடங்கிய ஊர்வலம் கடைவீதி, மணிக்கூண்டு வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் சென்ற மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திச்சென்றனர். மேலும் பொதுமக்களுக்கு மழைநீர் சேமிப்பின் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் உதவி தலைமை ஆசிரியர் மணி மற்றும் ஆசிரியர்கள் சிவானந்தம், குப்புசாமி, செந்தில் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story