செய்துங்கநல்லூர் அருகே குளம் தூர்வாரும் பணி கலெக்டர் சந்தீப்நந்தூரி தொடங்கி வைத்தார்
செய்துங்கநல்லூர் அருகே முத்தாலங்குறிச்சி குளத்தை தூர்வாரும் பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
ஸ்ரீவைகுண்டம்,
செய்துங்கநல்லூர் அருகே முத்தாலங்குறிச்சி குளத்தை தூர்வாரும் பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
குளம் தூர்வாரும் பணி
செய்துங்கநல்லூர் அருகே முத்தாலங்குறிச்சி குளத்தை தூர்வாரும் பணி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, குளத்தை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் குளத்தை தூர்வாரி, அதன் கரையை பலப்படுத்தும் பணி நடந்தது.
தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் கலோன், பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் உமாசங்கர், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன், கருங்குளம் யூனியன் ஆணையாளர் சுப்புலட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் அய்யனார், கிராம நிர்வாக அலுவலர் கந்த சிவசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோரிக்கை மனு
முன்னதாக முத்தாலங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கினர். அதில், முத்தாலங்குறிச்சி குளத்தில் அள்ளப்படும் மண்ணை வெளியே கொண்டு செல்லாமல், கரையை பலப்படுத்த வேண்டும். மேலும் குளத்தில் உள்ள புதர்களை அகற்றி, குளம் முழுவதையும் சீராக தூர்வார வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், குளத்தில் அள்ளப்படும் மண்ணை வெளியே கொண்டு செல்லாமல், கரையை பலப்படுத்துவதாக தெரிவித்தார். பின்னர் அவர், முத்தாலங்குறிச்சி வடக்கூரில் மயானத்துக்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை பார்வையிட்டு, அவற்றை அகற்ற உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story