கோவில்பட்டி அருகே பாதுகாப்பு பணிக்கு வந்த போலீஸ் ஏட்டு திடீர் சாவு


கோவில்பட்டி அருகே பாதுகாப்பு பணிக்கு வந்த போலீஸ் ஏட்டு திடீர் சாவு
x
தினத்தந்தி 12 July 2019 9:30 PM GMT (Updated: 12 July 2019 6:37 PM GMT)

கோவில்பட்டி அருகே பாதுகாப்பு பணிக்கு வந்த போலீஸ் ஏட்டு திடீரென்று உயிரிழந்தார்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே பாதுகாப்பு பணிக்கு வந்த போலீஸ் ஏட்டு திடீரென்று உயிரிழந்தார்.

போலீஸ் ஏட்டு சாவு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வேலாயுதபட்டினம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் கண்ணதாசன் (வயது 57). இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் நடந்த வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழாவையொட்டி, பாதுகாப்பு பணிக்காக வந்திருந்தார். இவர் பக்கத்து ஊரான வானரமுட்டி நூலகத்தில் தங்கியிருந்தார்.

இரவில் விழா முடிந்ததும், வெளி மாவட்டங்களில் இருந்து பாதுகாப்பு பணிக்காக வந்த போலீசார் திரும்பி சென்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் கண்ணதாசன் திடீரென வானரமுட்டி நூலகத்தில் இறந்து கிடந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த கண்ணதாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்ணதாசன் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. எனவே அவர் உடல் நலக்குறைவால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இறந்த கண்ணதாசனுக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும், விஜய் ஆனந்த், அருண்பாண்டி, மருதபாண்டி ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.

Next Story