மாவட்ட செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே, பெண், தீக்குளித்து தற்கொலை + "||" + Near Ulundurpet, Woman commits suicide by fire

உளுந்தூர்பேட்டை அருகே, பெண், தீக்குளித்து தற்கொலை

உளுந்தூர்பேட்டை அருகே, பெண், தீக்குளித்து தற்கொலை
உளுந்தூர்பேட்டை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம்,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வடக்கு குரும்பூர் காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி சிவசக்தி(வயது 32). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் மகன் சரியாக பள்ளிக்கூடம் செல்வதில்லை என்று கூறி, சிவசக்தியை ஆறுமுகம் திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சிவசக்தி வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவர் வலியால் அலறித்துடித்தார்.

இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சிவசக்தி மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவசக்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை