கல்வி சேனல் சோதனை ஒளிபரப்பை முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு


கல்வி சேனல் சோதனை ஒளிபரப்பை முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு
x
தினத்தந்தி 12 July 2019 9:30 PM GMT (Updated: 12 July 2019 6:42 PM GMT)

தூத்துக்குடியில் கல்வி சேனல் சோதனை ஒளிபரப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் கல்வி சேனல் சோதனை ஒளிபரப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி ஆய்வு செய்தார்.

கல்வி சேனல்

தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை மூலம் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் விதமாக கல்வி தொலைக்காட்சி என்னும் 24 மணி நேர சேனல் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதற்கான சோதனை ஒளிபரப்பு தற்போது நடந்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3-ந்தேதி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி முதற்கட்டமாக 87 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் செட்-டாப் பாக்ஸ்களை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு செட்-டாப் பாக்ஸ் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

இந்த நிலையில் நேற்று காலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி செட்-டாப் பாக்ஸ் இணைப்பு வழங்கப்பட்ட சோலீஸ்புரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று, கல்வி தொலைக்காட்சி சேனல் சோதனை ஒளிபரப்பை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story