கொடிநாள் நிதியாக ரூ.1½ கோடி வசூல்: கலெக்டர் ஆசியா மரியத்திற்கு வெள்ளி கேடயம் முன்னாள் படைவீரர் நலத்துறையினர் வழங்கினர்


கொடிநாள் நிதியாக ரூ.1½ கோடி வசூல்: கலெக்டர் ஆசியா மரியத்திற்கு வெள்ளி கேடயம் முன்னாள் படைவீரர் நலத்துறையினர் வழங்கினர்
x
தினத்தந்தி 12 July 2019 11:00 PM GMT (Updated: 12 July 2019 7:09 PM GMT)

கொடிநாள் நிதியாக ரூ.1½ கோடி வசூல் செய்ததற்காக நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியத்திற்கு, முன்னாள் படைவீரர் நலத்துறையினர் வெள்ளி கேடயத்தை பரிசாக வழங்கினர்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் கொடிநாள் வசூல் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் தாங்கினார். இதில் கொடிநாள் வசூலுக்காக அனைத்து துறைகளுக்கும் வழங்கப்பட்ட இலக்கினை எட்டியது குறித்து கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் 2016-ம் ஆண்டிற்கான கொடிநாள் வசூலில் ரூ.5 லட்சத்திற்கு மேல் வசூல் புரிந்தமைக்காக வெள்ளி பதக்கம் மற்றும் தமிழக ஆளுநரின் பாராட்டு சான்றிதழ்களை புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் ஜெயந்தி, மாவட்ட பதிவாளர் (தணிக்கை) ரவி ஆகியோருக்கும், 2016-ம் ஆண்டிற்கான கொடிநாள் வசூலில் ரூ.3 லட்சத்திற்கு மேல் வசூல் புரிந்தமைக்காக வெள்ளி பதக்கம் மற்றும் தலைமை செயலாளரின் பாராட்டு சான்றிதழ்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கடேசன், துரைசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பாலமுருகன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சசிகுமார், முதன்மை கல்வி அலுவலர் உஷா, மோட்டார் வாகன ஆய்வாளர் சதாசிவம், ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்ட இணைபதிவாளர் யசோதாதேவி ஆகிய 7 அரசுத்துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.

இக்கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திற்கு 2017-ம் ஆண்டிற்கான படைவீரர் கொடிநாள் வசூலாக ரூ.1 கோடியே 54 லட்சத்து 33 ஆயிரம் எட்டியதற்காக முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பாக வெள்ளி சிறப்பு கேடயம் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன், துணை கலெக்டர் (பயிற்சி) பிரேமலதா உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story