“26 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்” கலெக்டர் ஷில்பா உத்தரவு


“26 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்” கலெக்டர் ஷில்பா உத்தரவு
x
தினத்தந்தி 13 July 2019 3:15 AM IST (Updated: 13 July 2019 12:54 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் உள்ள 26 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டு உள்ளார்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் உள்ள 26 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இடமாற்றம்

பாளையங்கோட்டை கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், ஆலங்குளம் வட்டார ஊராட்சி வளர்ச்சி அலுவலராகவும், கீழப்பாவூர் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகசுந்தரம், தென்காசி வட்டார ஊராட்சி வளர்ச்சி அலுவலராகவும், ஆலங்குளம் வட்டார ஊராட்சி வளர்ச்சி அலுவலர் ராதா, கீழப்பாவூர் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், தென்காசி வட்டார ஊராட்சி வளர்ச்சி அலுவலர் கணபதி, குருவிகுளம் வட்டார ஊராட்சி வளர்ச்சி அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

குருவிகுளம் வட்டார ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன், நாங்குநேரி கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், மேலநீலிதநல்லூர் வட்டார ஊராட்சி வளர்ச்சி அலுவலர் ஜெயராமன், குருவிகுளம் கிராம ஊராட்சி வளர்ச்சி அலுவலராகவும், மானூர் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலைமுருகன், பாளையங்கோட்டை வட்டார ஊராட்சி வளர்ச்சி அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

பாளையங்கோட்டை

பாளையங்கோட்டை வட்டார ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்தசாரதி, கீழப்பாவூர் வட்டார ஊராட்சி வளர்ச்சி அலுவலராகவும், கீழப்பாவூர் வட்டார ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், பாப்பாக்குடி வட்டார ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், மானூர் வட்டார ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரம்மநாயகம், நாங்குநேரி வட்டார ஊராட்சி வளர்ச்சி அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

அம்பை கிராம ஊரா ட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், அம்பை வட்டார ஊராட்சி வளர்ச்சி அலுவலராகவும், நாங்குநேரி கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன், மேலநீலீதநல்லூர் வட்டார ஊராட்சி வளர்ச்சி அலுவலராகவும், வாசுதேவநல்லூர் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, வாசுதேவநல்லூர் வட்டார ஊராட்சி வளர்ச்சி அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

சங்கரன்கோவில்

கடையநல்லூர் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துப்பாண்டியன், சங்கரன்கோவில் வட்டார ஊராட்சி வளர்ச்சி அலுவலராகவும், சங்கரன்கோவில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், மானூர் வட்டார ஊராட்சி வளர்ச்சி அலுவலராகவும், சேரன்மாதேவி கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, சேரன்மாதேவி வட்டார ஊராட்சி வளர்ச்சி அலுவலராகவும், வள்ளியூர் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சுசீலா பீட்டர், வள்ளியூர் வட்டார ஊராட்சி வளர்ச்சி அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

வள்ளியூர் வட்டார ஊராட்சி வளர்ச்சி அலுவலர் ஸ்ரீகாந்த், வள்ளியூர் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அம்பை வட்டார ஊராட்சி வளர்ச்சி அலுவலர் சண்முகநாதன், அம்பை கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், சேரன்மாதேவி வட்டார ஊராட்சி வளர்ச்சி அலுவலர் ருக்மணி, சேரன்மாதேவி கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

வாசுதேவநல்லூர் கிராம ஊராட்சி

நாங்குநேரி வட்டார ஊராட்சி வளர்ச்சி அலுவலர் கணபதி, பாளையங்கோட்டை கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், பாப்பாக்குடி வட்டார ஊராட்சி வளர்ச்சி அலுவலர் கமலகுமாரி, வாசுதேவநல்லூர் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், வாசுதேவநல்லூர் வட்டார ஊராட்சி வளர்ச்சி அலுவலர் அருணாதேவி, செங்கோட்டை கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், சங்கரன்கோவில் வட்டார ஊராட்சி வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், சங்கரன்கோவில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

செங்கோட்டை கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சிக்கந்தர்பீவி, கடையநல்லூர் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், குருவிகுளம் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாச சுடலைமுத்து, மானூர் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

Next Story