வண்டலூர் பூங்காவில் புலி குட்டிகள் செய்யும் சேட்டைகளை இணையதளத்தில் பார்க்கலாம்


வண்டலூர் பூங்காவில் புலி குட்டிகள் செய்யும் சேட்டைகளை இணையதளத்தில் பார்க்கலாம்
x
தினத்தந்தி 13 July 2019 4:00 AM IST (Updated: 13 July 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் உள்ள புலிகள் பாதுகாப்பு மையங்களை தவிர அழிநிலையிலுள்ள புலிகளை இனவிருத்தி செய்வதில் உயிரியல் பூங்காக்களின் பணி முக்கியமானதாகும்.

வண்டலூர்,

தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக பெரிய உயிரியல் பூங்கா வண்டலூர் பூங்கா ஆகும். இந்தியாவில் உள்ள புலிகள் பாதுகாப்பு மையங்களை தவிர அழிநிலையிலுள்ள புலிகளை இனவிருத்தி செய்வதில் உயிரியல் பூங்காக்களின் பணி முக்கியமானதாகும்.

பொதுமக்கள் பார்ப்பதற்கு வசதியாக கருப்பு புலிக்குட்டிகள் அதன் தாயுடன் பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதனை பொதுமக்கள் கண்டு களித்து வருகின்றனர். பொதுமக்களின் நேரடி ஒளிபரப்பை நிறைவு செய்யும் பொருட்டாக வண்டலூர் பூங்காவில் கருப்பு புலிகுட்டிகள் மற்றும் அதன் உடன்பிறந்த வெள்ளைப்புலிக்குட்டியை அதன் தாயுடன் பூங்கா இணையதளமான www.aazp.in என்ற இணையதளத்தில் 24 மணி நேரமும் கண்டு களிக்கலாம்.

இந்த தகவல் வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story