திருப்பத்தூரில் மழை: குடியிருப்பு பகுதிக்குள் தேங்கி நிற்கும் தண்ணீர், சுகாதாரகேடு ஏற்படும் அபாயம்
திருப்பத்தூர் பகுதியில் பெய்த மழையால் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை உள்ளிட்ட பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்ததால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
குறிப்பாக திருப்பத்தூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையினால் சாலை மற்றும் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்துள்ளது.
திருப்பத்தூர் காளியம்மன் கோவில் தெரு, அச்சக்கட்டுப் பகுதிகளில் உள்ள வாருகால் களில் அடைப்பு காரணமாக அந்த பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
திருப்பத்தூர் 17-வது வார்டு அபுபக்கர் நகர் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதால் அந்த பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் இதை சீர்படுத்தி மழைநீர் வெளியே செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது தேங்கி நிற்கும் மழை நீரால் இப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல், மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. மேலும் சாலைகளில் தேங்கி உள்ள மழைநீரால் அந்த சாலைகளும் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே இதை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story