குடிநீர் கேட்டு மறியலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு
வேட்டமங்கலம் ஊராட்சி பகுதிகளில் குடிநீர் கேட்டு மறியலில் ஈடுபட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நொய்யல்,
கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்தும், பல்வேறு பகுதிகளில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து டேங்கர் லாரிகளில் தண்ணீர் தினமும் கொண்டு செல்வதை கண்டித்தும் நேற்று முன்தினம் நொய்யல் குறுக்குச்சாலை மெயின் ரோட்டில் மறியல் நடந்தது. இந்நிலையில் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்திற்கும் இடையூறு செய்ததாக வேட்டமங்கலம் தி.மு.க. ஊராட்சி செயலாளர் குணசேகரன், கரூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கந்தசாமி, நொய்யல் கிளை செயலாளர் சிவசண்முகம், முன்னாள் ஒன்றிய செயலாளர் கருப்பண்ணன், நொய்யல் பகுதியை சேர்ந்த சாமிநாதன், வாசுதேவன், கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த குணசேகரன், வெள்ளியம்பாளையத்தை சேர்ந்த சதாசிவம், சண்முகம், குமார் ஆகிய 10 பேர் மீது வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story