செங்கத்தில் மின்னல் தாக்கி கோவில் கோபுரம் சேதம்


செங்கத்தில் மின்னல் தாக்கி கோவில் கோபுரம் சேதம்
x
தினத்தந்தி 14 July 2019 4:00 AM IST (Updated: 14 July 2019 12:00 AM IST)
t-max-icont-min-icon

செங்கத்தில் மின்னல் தாக்கி கோவில் கோபுரம் சேதமடைந்தது.

செங்கம், 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோபால பார்த்தசாரதி பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுற்றுப்பகுதியை சேர்ந்தவர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை செங்கத்தில் கருமேகங்கள் சூழ்ந்து சூறாவளி காற்று வீசியது. அதைத்தொடர்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

அப்போது மின்னல் தாக்கியதில் கோவில் ராஜகோபுரத்தின் உச்சியில் இருந்த சிங்க முகத்தின் வலது பகுதி உடைந்து கீழே விழுந்தது. இதனை கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அதைத்தொடர்ந்து நேற்று காலை கோவில் சார்பில் கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் யாகம் நடத்தி பரிகார பூஜைகளும் செய்யப்பட்டன.

Next Story