தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா 26-ந்தேதி தொடங்குகிறது பாதுகாப்பு ஏற்பாடு குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை


தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா 26-ந்தேதி தொடங்குகிறது பாதுகாப்பு ஏற்பாடு குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை
x
தினத்தந்தி 13 July 2019 10:00 PM GMT (Updated: 13 July 2019 6:39 PM GMT)

தூத்துக்குடியில் பனிமயமாதா ஆலய திருவிழா வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடு குறித்து போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் பனிமயமாதா ஆலய திருவிழா வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடு குறித்து போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா வருகிற 26-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி வரை நடக்க உள்ளது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் தலைமையில் பனிமயமாதா ஆலய வளாகத்தில் உள்ள அரங்கில் நடந்தது.

இந்த கூட்டத்தில், மாதா கோவில் வளாகத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக புறக்காவல் நிலையம் அமைத்தல், கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தல், சாலையோர கடைகள் ஒரு புறம் மட்டும் அமைத்தல், ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து, அவற்றை புறக்காவல் நிலையத்தில் உள்ள ஒளித்திரை மூலம் கண்காணிக்கும் வகையில் அமைத்தல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், முக்கிய அறிவிப்புகளை தெரிவிக்கும் வகையிலும் ஒலிபெருக்கி அமைத்தல், தீயணைப்புத்துறையினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருத்தல், மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவக்குழு இருக்கும் வகையிலும், 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் இருக்கும்படியும் செய்தல், பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் மின்விளக் குகள் அமைத்தல் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பார்வையிட்டார்

தூத்துக்குடி நகர்ப்புற துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், பனிமய மாதா ஆலய பங்குதந்தை குமார்ராஜா, குழந்தைகள் பள்ளி பங்குதந்தை வில்லயம் சந்தானம், திரேஸ்புரம் பங்குதந்தை நோயல், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜீன்குமார் (தென்பாகம்), ஜெயப்பிரகாஷ் (மத்தியபாகம்), சார்லஸ் (தாளமுத்துநகர்), கிருஷ்ணகுமார் (தென்பாகம் குற்றப்பிரிவு), தீயணைப்பு துறையினர், மின் வாரியத்தினர், சுகாதாரத்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர், ஆலய திருவிழாவையொட்டி கடைகள் அமைக்கப்படும் பகுதியை போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் பார்வையிட்டார்.

Next Story