தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் லாரி டிரைவர் பலி மற்றொருவர் படுகாயம்


தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் லாரி டிரைவர் பலி மற்றொருவர் படுகாயம்
x
தினத்தந்தி 14 July 2019 3:00 AM IST (Updated: 14 July 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் லாரி டிரைவர் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் லாரி டிரைவர் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

லாரி டிரைவர்கள்

தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பகுதியை சேர்ந்தவர் உதயசூரியன். இவருடைய மகன் பாரதிராஜா (வயது 31). அதே பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் வேல் கண்ணன் (23). இவர்கள் இருவரும் லாரி டிரைவர்கள்.

இவர்கள் நேற்று முன்தினம் கோவில்பட்டியில் உள்ள லாரி ஷெட்டில் லாரிகளை விட்டு விட்டு, மோட்டார் சைக்கிளில் சிவகளைக்கு புறப்பட்டு வந்தனர். மோட்டார் சைக்கிளை வேல் கண்ணன் ஓட்டினார்.

விபத்தில் பலி

மதுரை-தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் உலர் பூக்கள் உற்பத்தி நிறுவனம் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே பாரதிராஜா பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த வேல் கண்ணன், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் இறந்த பாரதிராஜாவிற்கு பால்கனி என்ற மனைவியும், 5 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

Next Story