கொடுக்கல் வாங்கல் தகராறில் நிலத்தரகரை கழுத்தை நெரித்து கொன்றவர் கைது குஜராத்தில் சிக்கினார்
கொடுக்கல் வாங்கல் தகராறில் நிலத்தரகரை கழுத்தை நெரித்து கொலை செய்தவர் குஜராத்தில் கைது செய்யப்பட்டார்.
வசாய்,
கொடுக்கல் வாங்கல் தகராறில் நிலத்தரகரை கழுத்தை நெரித்து கொலை செய்தவர் குஜராத்தில் கைது செய்யப்பட்டார்.
நிலத்தரகர்
பால்கர் மாவட்டம் தலாசரி தாலுகாவில் மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையோரம் கடந்த சிலநாட்களுக்கு முன் நிலத்தரகர் லலித் பகாரியா (வயது 45) காருக்குள் பிணமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து தலாசாி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நிலத்தரகரை கொலை செய்தவரை வலைவீசி தேடி வந்தனர்.
கைது
இந்தநிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் மற்றொரு நிலத்தரகரான மயூர் பன்டாரி, லலித் பகாரியாவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குஜராத் மாநிலம் உமர்காவ் பகுதியில் வைத்து மயூர் பன்டாரியை (45) கைது செய்தனர்.
விசாரணையில் மயூர் பன்டாரி ரூ.35 லட்சம் பணத்தை லலித் பகாரியாவிற்கு கொடுத்துள்ளார். இதில் அவர் பணத்தை திருப்பி கொடுக்க தவறியதாக தெரிகிறது. இதனால் சம்பவத்தன்று அவரை மயூர் பன்டாரி, கூட்டாளி ஒருவருடன் சேர்ந்து ஷூலேசால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. போலீசார் அவரின் கூட்டாளியை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story