3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து டிரைவர் பலி
வடபழனியில் விடுதியின் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
பூந்தமல்லி,
சென்னை வடபழனி, பெரியார் பாதையில் உள்ள விடுதி ஒன்றில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி (வயது 28) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறை எடுத்து தங்கினார். டிரைவரான இவர், தனக்கு சொந்தமான காரை வாடகைக்கு ஓட்டி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு பெரியசாமி, குடிபோதையில் தான் தங்கியுள்ள விடுதி அறைக்கு நடந்து சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக விடுதியின் 3-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த பெரியசாமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் கன்னியாகுமரியை சேர்ந்தவர் ஆனந்த் (43). இவர், முகப்பேரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி, தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஆனந்த், குடிபோதையில் விடுதியின் முதல் மாடியில் படிக்கட்டில் ஏறும்போது தவறி விழுந்துவிட்டார்.
அவரை அங்கிருந்தவர்கள் தூக்கி விட்டனர். பின்னர் 2-வது மாடிக்கு நடந்து சென்ற ஆனந்த், மீண்டும் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த ஆனந்த் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ஜெ.ஜெ.நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story