கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய கோரி - இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கூடலூர்,
தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட கோவில்களில் தரிசன கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை ரத்து செய்ய கோரி நேற்று மாநிலம் முழுவதும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள காந்தி சிலை முன்பு மதியம் 12 மணிக்கு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு நகர பொதுச்செயலாளர் சிவச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆட்டோ முன்னணி தலைவர் யுவராஜ், ஒன்றிய தலைவர் சதிஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சி.பி. சண்முகம் பேசினார். தொடர்ந்து கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் விஜிஷ், பிரகாஷ், நகர துணை தலைவர்கள் மணி, ஜெகன், பாலா, ஒன்றிய பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி, நகர செயலாளர்கள் ரங்கசாமி, பழனி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கோத்தகிரி மார்க்கெட் திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, நீலகிரி மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட செயலாளர் அருணாச்சலம், செயற்குழு உறுப்பினர் மணிகண்டன், நேருஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும், கோவில்களை முறையாக பராமரிக்க வேண்டும், தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி நளி நன்றி கூறினார்.
பந்தலூர் பஜாரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் முரளி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆனந்தன், மாநில நிர்வாகி சண்முகம் ஆகியோர் பேசினர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் கூடலூர் நகர செயலாளர் பரஞ்சோதி, நெல்லியாளம் பா.ஜ.க. நிர்வாகிகள் தீபக்ராம், அண்ணாதுரை, ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊட்டி ஏ.டி.சி. திடலில் நீலகிரி மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் மஞ்சுநாத், மாநில பேச்சாளர் நவநீதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதேபோன்று மஞ்சூரில் மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story