திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே மின்சாரம் தாக்கி ஓட்டல் ஊழியர் சாவு
திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே ஓட்டல் மாடியின் மீது உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக மேலே சென்றார். எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி ஓட்டல் ஊழியர் பரிதாபமாக இறந்து போனார்.
திருவள்ளூர்,
எனவே இந்த பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மின்வாரிய அதிகாரிகள் இனிமேலும் காலதாமதம் செய்யாமல் உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே உள்ள கருக்குழாய் தெருவில் ஓட்டல் உள்ளது. அந்த ஓட்டலில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்த ரத்தினசபாபதி புரத்தை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 21) தங்கி வேலை செய்து வந்தார். நேற்று காலை மோகன்ராஜ் அந்த ஓட்டல் மாடியின் மீது உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக மேலே சென்றார். அப்போது மாடி மீது தாழ்வாக சென்ற மின்சார கம்பி மீது எதிர்பாராதவிதமாக அவரது கைபட்டது. இதில் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அனைவரும் ஓட்டல் முன்பு திரண்டு இதே போல கடந்த ஆண்டும் ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்து போனார். இது 2-வது சம்பவம் ஆகும்.
எனவே இந்த பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மின்வாரிய அதிகாரிகள் இனிமேலும் காலதாமதம் செய்யாமல் உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story